வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக “Scheduled Chat” எனும் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாம் அனுப்ப விரும்பும் செய்தியை ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்கூட்டியே சேமித்து வைக்க முடியும்.

இதன் உதவியால் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகளைச் சரியான நேரத்தில் மறக்காமல் தானியங்கி முறையில் அனுப்பலாம்.முதலில் குழு உரையாடல்களில் அறிமுகமாகும் இந்த வசதி, மக்களின் வரவேற்பைப் பொறுத்துத் தனிப்பட்ட உரையாடல்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தற்போது வணிக ரீதியான கணக்குகளில் மட்டுமே கட்டண அடிப்படையில் உள்ள இந்தச் சேவையை, இனி அனைத்து பயனர்களும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.