திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கான அதிரடி வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரும் என ஆரூடம் கூறிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத் தொகை, மற்றும் ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துத் தாய்மார்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும், முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்வு, ஆண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து எனப் பல அதிரடி திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ், திமுக அரசின் குறைகளைக் கடுமையாகச் சாடினார்.
“பை பை ஸ்டாலின்” என முழங்கிய அவர், மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் ரூ.12,000-ஆக உயர்த்தப்படும் என்ற நற்செய்தியையும் பகிர்ந்து, 2026 தேர்தல் களம் அதிமுக-விற்கே சாதகமாக அமையும் எனத் தன்னம்பிக்கையுடன் பேசினார்.
