2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு, பின்னர் அந்த முடிவைத் திடீரெனத் திரும்பப் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கிண்டல் செய்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் ஒரு “U-Turn ஸ்பெஷலிஸ்ட்” என்று சாடியுள்ளார். “ஒவ்வொரு முறையும் ஒரு முடிவை அறிவித்துவிட்டு, பின்னர் உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு பயந்து பல்டி அடிப்பது பாகிஸ்தானின் வாடிக்கையாகிவிட்டது” என்று அவர் மார்தட்டியுள்ளார்.

​வங்கதேசத்திற்கு ஆதரவாகப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் கூறியதில் எந்த லாஜிக் இல்லை என்றும், ஐசிசி-யின் நிதி நெருக்கடி மற்றும் அபராதங்களுக்குப் பயந்துதான் பாகிஸ்தான் இப்போதே பணிந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “வெறுமனே பெரிய அறிக்கைகளை விட்டுவிட்டு, பின்னர் சரண்டர் ஆவது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார். பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் மோதப்போவது உறுதியாகியுள்ள நிலையில், ஆஃப்-ஃபீல்டில் நடக்கும் இந்த அரசியல் சண்டைகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.