குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ஜஸ்பீர் சிங், இந்தியப் பெற்றோர்களின் வளர்ப்பு முறை குறித்துப் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்திய வளர்ப்பு முறையை “பிரஷர் குக்கர் பேரண்டிங்” என்று விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான இந்தியப் பெற்றோர்கள் குழந்தைகளைச் சுதந்திரமான மனிதர்களாக வளர்ப்பதில்லை, மாறாகத் தங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
குழந்தைகளின் படிப்பு, வேலை மற்றும் திருமணம் போன்ற முக்கிய முடிவுகளைப் பெற்றோர்களே எடுப்பதையும், குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆர்வத்திற்கு முக்கியத்துவம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் கேள்வி கேட்பதை அவமரியாதையாகக் கருதும் சூழல் வீடுகளில் நிலவுவதாகவும், தோல்வியைத் தற்கொலைக்குச் சமமான ஒரு குற்றமாகச் சமூகம் பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். “வீட்டிற்குள் கேள்வி கேட்க அனுமதிக்காத சமூகம், வெளியில் சிந்திக்கும் மனிதர்களை உருவாக்காது” என்று அவர் கூறியிருப்பது பலரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Indian parenting is pressure cooker parenting. One of the worst models globally. Not because parents are evil. But because the system is broken and no one questions it.
Most Indian parents didn’t raise children. They raised outcomes.
Children are treated like owned assets -…
— Jasveer Singh (@jasveer10) February 8, 2026
“>
அவரது இந்தக் கருத்தை ஆதரித்து பலர் தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வரும் வேளையில், சிலர் இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றும், குழந்தைகளின் ஒழுக்கத்திற்குப் பெற்றோரின் கட்டுப்பாடு அவசியம் என்றும் கூறி மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
