சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எப்போதும் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தால் மேலே இருக்கும் சூரியன் எப்படித் தெரியும்? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்தான் சூரியனின் பவரும், அதன் இருப்பும் தெரியும்” என்று தனது கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட்டு ஒரு தத்துவத்தைச் சொல்லியிருந்தார்.

​இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இப்போது ஒரு ‘ரூட்’ தத்துவத்தைப் போட்டுள்ளார். “மேலே பார்த்துக் கொண்டே நடந்தால் குழியில் விழ வேண்டியதுதான்; கால்களைப் பார்த்து நடந்தால்தான் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பது தெரியும்” என்று அவர் முதலமைச்சருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.