அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி காலை இரண்டு ரத்தம் சொட்டும் சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு இளைஞரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது.
கொலை செய்யப்பட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு காகிதத்தில் சில செல்போன் எண்கள் இருந்தன. அதை வைத்து விசாரணை நடத்தியபோது, கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பது உறுதியானது.
தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவர், அங்கேயே மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்துள்ளார்.
கௌரவ் குமாரின் நண்பர்கள் உள்ளிட்ட 9 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், 5 பேர் இந்தக் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டது தெரிந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலம் இதோ:
கௌரவ் குமாரின் மனைவியை அந்த நண்பர்கள் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளது. அதை கௌரவ் குமார் தடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், முதலில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி அடையாறில் வீசியுள்ளனர்.
சாட்சி சொல்ல யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக, அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையையும் அந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்து வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளது.
