சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘பார்டர் 2’ திரைப்படத்தின் தாக்கம் இந்திய கிரிக்கெட் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலை குளியலறையில் பாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பாடலை மிகவும் ரசித்துப் பாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஜெய்ஸ்வால், “இந்தக் காதல் நிறைந்த பாடல் என் மனதை விட்டு நீங்க மறுக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். முகத்தில் க்ரீம் தடவியபடி கண்ணாடியின் முன் நின்று ஜெய்ஸ்வால் பாடும் இந்த கலகலப்பான வீடியோ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Yashasvi Jaiswal bro singing ain’t your domain please stick to the cricket. 😭😭pic.twitter.com/Ar0b5XCwHI
— Dhillon (@sehajdhillon_) January 25, 2026
“>
இந்நிலையில் ஒருபுறம் அவரது விளையாட்டுத்தனமான அணுகுமுறையை ரசிகர்கள் ரசித்தாலும், மற்றொருபுறம் “உங்களுக்கு கிரிக்கெட் தான் கைவரும், பாடுவது உங்கள் துறை அல்ல” என்று நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் விளாசி அசத்திய ஜெய்ஸ்வால், தற்போது 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாத நிலையில், மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
