சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னீர்களே, இப்போது தை பிறந்துவிட்டதே?” என்று செய்தியாளர்கள் மடக்கி கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் பதற்றமடையாத ஓ.பி.எஸ், “தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் பாக்கி உள்ளன” என்று தனது பாணியில் மிக நிதானமாகப் பதில் அளித்தார். காலம் கனிந்து வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதையும், தங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் நிகழ இன்னும் அவகாசம் இருக்கிறது என்பதையும் அவர் இந்தப் பதிலின் மூலம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

​ஓ.பி.எஸ்-ன் இந்தப் பதில் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. சசிகலா ஒரு பக்கம் திமுகவுக்கு எதிராக ‘ரகசிய பிளான்’ போட்டு வரும் நிலையில், ஓ.பி.எஸ் இன்னும் தை மாதக் கணக்கைச் சொல்லிக் கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சஸ்பென்ஸை கூட்டியுள்ளது. மீதமுள்ள அந்த 25 நாட்களுக்குள் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் நடக்குமா அல்லது பிரிந்து கிடக்கும் அணிகள் ஒன்று சேருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.