ஜப்பான் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கீழே விழுந்து காயங்களுடன் ரத்தப்போக்கில் அவதிப்பட்ட முதியவர் ஒருவருக்கு ரோகன் ராணா என்ற இந்திய இளைஞர் முதலுதவி செய்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பாதையில் ஏராளமானோர் கடந்து சென்ற போதிலும் யாரும் உதவ முன்வராத நிலையில், காயமடைந்த முதியவரை மீட்ட அந்த இளைஞர் ரத்தப்போக்கை நிறுத்தி அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
View this post on Instagram
இதற்கு நன்றிக்கடனாக அந்த முதியவர் பணம் கொடுக்க முன்வந்தபோது, உதவிக்கு கைமாறு கருதுவது தனது இந்தியப் பண்பாடு அல்ல எனக் கூறி அதனை அவர் மென்மையாக மறுத்துவிட்டார். தான் ஒரு இந்தியன் என்று பெருமையுடன் குறிப்பிட்ட அந்த இளைஞரின் மனிதாபிமானச் செயலை உலகெங்கிலும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டிலும் மனிதநேயமே ஒரு நாட்டின் உண்மையான பெருமை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
