மக்களுக்காக உழைக்க யார் வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக SDPI கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் ஒரு ‘மாஸ் லீடராக’ உருவெடுத்து வரும் நிலையில், அவர் மக்களுக்காகப் பணி செய்ய வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், SDPI தலைவரின் இந்த பாசிட்டிவான கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் தவெக-வுடன் கூட்டணியா அல்லது வேறு யாருடனாவது கைகோர்ப்பதா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று நெல்லை முபாரக் கூறியுள்ளார். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள SDPI மாநிலக் குழு கூட்டத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
