சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையிலும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்த ஆசிரியர்களுடன் இன்று ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று (ஜனவரி 14) காலை 11 மணிக்கு அவரது முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான முடிவு எட்டப்படுமா? ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கை இன்று நிறைவேற்றப்படுமா? என ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.