பீகார் மாநிலத்தின் பரபரப்பான நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் உயிரைப் பணையம் வைத்து பைக் சாகசங்களில் ஈடுபடும் காணொளி தற்போது சமூக வலைத்தளமான X-ல் தீயாய் பரவி வருகிறது. பைக்கின் சீட் மீது ஏறி நின்றபடியும், கைகளை விட்டுவிட்டு ஓட்டியும் அந்த இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன. போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல், மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் இந்த ஆபத்தான பயணம் தொடர்கிறது.

​இந்த வீடியோவில் உச்சகட்ட அதிர்ச்சியே, அதே சாலையில் இவர்களுக்குச் சற்று அருகிலேயே போலீஸ் வாகனம் ஒன்று செல்வதுதான். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினர் கண்ணெதிரே இவ்வளவு அத்துமீறல்கள் நடந்தும், அந்த இளைஞர்கள் பயமின்றிச் சாகசம் செய்வது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “போலீஸ் என்னதான் செய்கிறது?” என்ற கேள்வியோடு வைரலாகும் இந்த வீடியோ, சாலைப் பாதுகாப்பு என்பது கேலிப்பொருளாகி விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.