உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் சக்கரங்களைத் திருடர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த ஓமிக்ரான்-2 பகுதியில் இந்தத் திருட்டு நடந்துள்ளது.
காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த திருடர்கள், அதன் இரண்டு சக்கரங்களைக் கழற்றிக்கொண்டு, காரை செங்கற்கள் மீது ஏற்றி வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அந்த வழியாகப் பொதுமக்கள் வருவதைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள கருப்பு நிற மஹிந்திரா தார் காரின் ஒரு பக்கத்தில் இரண்டு சக்கரங்கள் இல்லாமல், வெறும் செங்கற்கள் முட்டுக் கொடுக்கப்பட்டு நிற்பது தெளிவாகத் தெரிகிறது. காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு சிதறிக் கிடப்பதையும் காண முடிகிறது.
ग्रेटर नोएडा, ओमिक्रोन-2: घर के बाहर खड़ी महिंद्रा थार के दो पहिए निकालकर उसे ईंटों पर खड़ी करके फरार हुए चोर।
कार के शीशे टूटने की आवाज सुनकर आसपास के लोग जाग गए, लोगों को आता देख चोर मौके से भाग निकले। pic.twitter.com/7AiHABw8VR— Greater Noida West (@GreaterNoidaW) January 10, 2026
“>
இது குறித்துப் போலீசார் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், குடியிருப்புப் பகுதிகளில் வாகனப் பாதுகாப்பு குறித்து இந்தப் பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
