பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அங்கிருந்த பாதசாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சுமார் 42 வயதுடைய டெரிக் டோனி என்பவர் ஓட்டி வந்த அந்த சொகுசு கார், வளைவில் திரும்ப முடியாமல் சாலைத் தடுப்பைத் தாண்டி குதித்து, ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதுடன் அருகில் இருந்த பிரபல உணவகத்தின் வெளிப்பக்கச் சுவரில் பலமாக மோதி நின்றது.

 

இரவு 11.35 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தின்போது, உணவகத்திற்கு வெளியே நின்றிருந்த ஒரு குழுவினர் மின்னல் வேகத்தில் வந்த காரைக் கண்டு சிதறி ஓடியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஜாபிர் அகமது சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய டெரிக் டோனி மீது ஜீவன் பீமா நகர் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.