கோவை விமான நிலையத்தில் இன்று (ஜன.7) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தமிழகத்தில் கூட்டணி மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசினார். வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், ஆட்சியில் பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதும்தான் காங்கிரஸ் தொண்டர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

​தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கட்சியை வலுப்படுத்துவதற்காகவே இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்றும், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். இவருடைய இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகக் கூட்டணி கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.