புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் போதிய கூட்டம் இல்லாத காரணத்தால், மேடைக்கு வருவதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தாமதம் செய்ததாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அமித்ஷாவுக்கு இடமில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி என்றும், குஜராத் பருப்பு இங்கு வேகாது என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.

மேலும், பாஜக கூட்டணியில் ஒத்த கருத்து இல்லாததால் தான் அதிமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.