அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு இடையே விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்பது குறித்து நடந்த சுவாரசியமான விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமே சிறந்தவர் என்று அந்தச் சிறுவன் வாதிட்டபோது, அதற்குப் பதிலடி கொடுத்த ஸ்பீட், விராட் கோலி எத்தனை ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார் என்பதைக் கவனிக்குமாறு ஆக்ரோஷமாகப் பேசினார்.
Speed – Virat Kohli or Babar Azam?
Pakistani kid – Babar Azam
Speed – Virat Kohli better
Kid – Babar Azam better
Speed – Virat Kohli won the more ICC matches
Kid – I knowBro owned Babar Azam and Pakistani kid both. Bro is a die hard fan of Virat 😭❤️pic.twitter.com/ual0V3XWlT
— Tejash (@Tejashyyyyy) January 4, 2026
பாபர் அசாமிடம் விராட் கோலியை விட அதிக கோப்பைகள் இல்லையென்றும், அதனால் கோலியே உலகின் சிறந்த வீரர் என்றும் அவர் அந்த வீடியோவில் வாதிடுகிறார். கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாக நிலவி வரும் இந்த ஒப்பீடு குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் புள்ளிவிவரங்களுடன் விவாதிப்பது இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கோலியை கிரிக்கெட் உலகின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று புகழ்ந்து பேசி வரும் ஸ்பீடின் இந்த வீடியோ, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
