உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தபோது, சுக்ராஜ் பிரஜாபதி என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த நபரிடமிருந்து தப்பிக்கப் போராடிய இளம்பெண், வீட்டில் இருந்த ‘பர்சா’ என்ற கோடரி போன்ற ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுக்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.