சமூக வலைதளங்களில் தங்களது காணொளிகள் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குளிரில் இருந்து தப்பிக்கிறோம் என்ற பெயரில் தனது உயிருக்கு உலை வைக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் செய்த விபரீத முயற்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
रील ऐसी बनाओ कि
👇🏻👇🏻😂😂 pic.twitter.com/piG5RxwuwQ
— तैमूर का जीजा 😎 🇮🇳 (@brijeshchaodhry) December 30, 2025
தனது உடல் முழுவதும் வைக்கோலைப் போர்த்திக் கொண்டு இருசக்கர வாகனத்தின் கைப்பிடிகள் மற்றும் இருக்கையின் பின்புறம் நெருப்பு எரியும் மண்பாண்டங்களைக் கட்டியபடி அவர் சாலையில் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தலையிலும் தீப்பற்றி எரியும் தகரப் பெட்டியைச் சுமந்தபடி அவர் சென்ற இந்த ஆபத்தான செயலை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
ஒரு சில விருப்பங்களுக்காகவும் புகழுக்காகவும் தங்களது விலைமதிப்பற்ற உயிரைப் பணையம் வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
