கர்நாடக மாநிலம் ஹாசனில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், தற்போது இணையத்தில் “WWE மல்யுத்தம்” போல வைரலாகி வருகிறது. “எங்க ஊர் ஹாசனில் ஸ்ட்ரீட் ரெஸ்லிங் ஆரம்பமாகிவிட்டது! என்ன ஒரு மூவ்ஸ்.. இதுதான் ஹாசன் ராயல் ரம்பிள்!” என்ற நையாண்டி வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், இரு தரப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக அடித்துக் கொள்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சாலையில் இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொள்ளும் இந்தக் காட்சி, பார்ப்பதற்கு ஒரு மல்யுத்தப் போட்டியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
🚨WWE ROYAL RUMBLE🚨
🚨ಬೀದಿ ಕಾಳಗ 🚨"WWE Royal Rumble street wrestling has started in our Hassan! What incredible moves, what a finishing move—this is the Hassan Royal Rumble!"
#WWE #RoyalRumble #Hassan #StreetWrestling #WrestlingLife #HassanDiaries #DesiWrestling… pic.twitter.com/u5oE8jFRsW— ಕನ್ನಡ್ವಿರಾಟ (@kohlificationn) December 29, 2025
இந்தக் காணொளியில் இரு தரப்பிலும் தலா நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என அனைவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக்கொள்கின்றனர். இதைப் பார்த்த இணையவாசிகள், இது நிஜமான சண்டையைப் போல இல்லாமல் ஏதோ ஒரு ரெஸ்லிங் போட்டியில் நடக்கும் சண்டைக் காட்சி போல இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பினிஷிங் மூவ்’ என்ற வார்த்தை, இந்த மோதலை இன்னும் சுவாரஸ்யமாக்கி இணையத்தில் வேகமாகப் பகிரச் செய்துள்ளது.
