ரன்பீர் சிங் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் ‘துரந்தர்’ திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, அக்ஷயே கண்ணா நடித்துள்ள ‘FA9LA’ என்ற பாடல், தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
View this post on Instagram
இந்தப் பாடலுக்கு ஊதா நிற ஆடை அணிந்த சிறுமி ஒருவர் ஆடும் நடன வீடியோ தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில் ஆடும் அந்தச் சிறுமியின் பெயர் ரித்தி ஷிர்காண்டே. இவரது துடிப்பான நடனத்தைக் கண்ட நெட்டிசன்கள், இவரை ‘குட்டி டான்ஸ் பாம்’ மற்றும் ‘சின்னஞ்சிறு இளவரசி’ என்று புகழ்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் இந்தச் சிறுமியின் கணக்கை அவரது பெற்றோர்களான பிரியங்கா மற்றும் ராகுல்ராஜ் நிர்வகித்து வருகின்றனர். நடனம் மட்டுமின்றி, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ப்பு முறை குறித்த பயனுள்ள தகவல்களையும் இவர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
