பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தனது ‘தண்டோரா’ பட விழாவில் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து மிகவும் அநாகரிகமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஹீரோயின்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அவர்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டும்;
உங்களை தவறாகப் பேசினாலும் எனக்கு கவலையில்லை” என்று திமிராகப் பேசியுள்ளார். மேலும், “கிளாமர் உடை அணிபவர்களைப் பார்த்தால் தரித்திரம் பிடித்தவளே எனத் திட்டத் தோன்றும், ஆனால் பெண் சுதந்திரம் என்று பேசிவிடுவார்கள் என்பதால் சொல்ல முடிவதில்லை” என ஒருமையில் விமர்சித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
பெண்கள் சேலை அணியும் போதுதான் தாயைப் போலவும், சாவித்ரி, சௌந்தர்யா போன்ற நடிகைகளைப் போலவும் கண்ணியமாகத் தெரிவார்கள் என சிவாஜி பாடம் எடுத்துள்ளார்.
“சுதந்திரம் என்பது ஒரு அதிர்ஷ்டம், அதைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்” என அவர் பேசியது பிற்போக்குத்தனமானது எனச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
ஏற்கனவே ‘கோர்ட்’ என்ற படத்தில் ஆணாதிக்கவாதியாக நடித்த சிவாஜி, நிஜத்திலும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
