அலிகார்: உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ரோராவர் காவல் எல்லைக்குட்பட்ட மாமுத் நகரில், கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோகம் நிகழ்ந்தது. உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்த இரண்டு சிறுவர்கள், குளிர்காய்வதற்காக தெருவில் மூட்டப்பட்டிருந்த நெருப்பின் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ சட்டெனப் பேரிச்சச்சலுடன் எழும்பி சிறுவர்களின் உடல்களில் பற்றியது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், வலி தாள முடியாமல் அச்சிறுவர்கள் தெருவில் அலறியபடி ஓடியக் காட்சி அங்கிருந்தவர்களை உறைய வைத்தது.
#अलीगढ़
आग में जलते हुए बच्चे सड़क पर दौड़े,वीडियो वायरल
जलते अलाव में किसी ने डाला पेट्रोल, तेज आग भड़की
मौके पर मौजूद लोगों ने बच्चों को पहुंचाया अस्पतालरोरावर थाना क्षेत्र के मामूद नगर गली नंबर 9 की घटना#Aligarh #FireAccident #ChildrenBurned @aligarhpolice pic.twitter.com/e4lp0OJ7T7
— तेजस टूडे (@AmitTri63070359) December 21, 2025
“>
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைக் கண்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று, போர்வைகளைக் கொண்டு தீயை அணைத்து சிறுவர்களை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்த இருவரும் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
<a href=”http://
#अलीगढ़
आग में जलते हुए बच्चे सड़क पर दौड़े,वीडियो वायरल
जलते अलाव में किसी ने डाला पेट्रोल, तेज आग भड़की
मौके पर मौजूद लोगों ने बच्चों को पहुंचाया अस्पतालरोरावर थाना क्षेत्र के मामूद नगर गली नंबर 9 की घटना#Aligarh #FireAccident #ChildrenBurned @aligarhpolice pic.twitter.com/e4lp0OJ7T7
— तेजस टूडे (@AmitTri63070359) December 21, 2025
“>
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரோராவர் போலீசார், நெருப்பில் பெட்ரோல் ஊற்றிய நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.