ஈரோட்டில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்தக் கூட்டத்திற்காக வழங்கப்பட்ட அனுமதியை மீறும் வகையில், ஏதேனும் நிபந்தனைகள் மீறப்பட்டால், நிகழ்ச்சிக்கான அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுச்சொத்தைப் பாதுகாப்பதிலும், நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பதிலும் தவெக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
