கனடாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளர் ஜஸ்டின் என்பவர், இந்தியாவின் ஸ்லீப்பர் பேருந்துகளை ஐரோப்பியப் பேருந்துகளை விடச் சிறந்தவை என்று பாராட்டிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் ஸ்லீப்பர் பேருந்தில் பயணம் செய்த ஜஸ்டின், அதன் ‘மிரட்டலான’ அம்சங்களை எடுத்துரைத்து, ஐரோப்பியப் பேருந்துகள் தனது பயணங்களின்போது இந்தியப் பேருந்துகளைப் போல இவ்வளவு சிறப்பாகத் தங்களை கவனித்ததில்லை என்று கூறியுள்ளார்.
“ஐரோப்பியப் பேருந்துகளில் இந்தியன் ஸ்லீப்பர் பேருந்துகளைப் போல எந்த வசதியும் இல்லை. இது உண்மையிலேயே அருமை. உங்களுக்கு ஒரு படுக்கை, சில பேக்கரி பொருட்கள், ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு போர்வை கிடைக்கிறது,” என்று ஜஸ்டின் கூறியுள்ளார்.
ஸ்லீப்பர் பேருந்துகளில் பயணிப்பதன் சிறந்த அம்சம், நிம்மதியாக உறங்கிவிட்டு, இலக்கு நகரத்தில் சோர்வின்றி விழிப்பதுதான் என்று அவர் கூறியுள்ளார். மேலும், “ஐரோப்பியப் பேருந்துகள் என்னை இவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டதில்லை. அடுத்த முறை நீங்கள் இந்தியா வரும்போது, பதினைந்து டாலர் செலவழித்து, உங்கள் நண்பர்களுடன் பேருந்தில் வந்து தங்கிச் செல்லுங்கள்,” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
View this post on Instagram
ஒரு கோடியே எழுபது லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த காணொளிக்கு சமூக ஊடகப் பயனர்கள், ‘பழைய துருப்பிடித்த பேருந்துகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்தியாவைக் குறை சொல்லாமல், நல்ல பேருந்தைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி’, ‘இந்த ரூட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட பேருந்துகள் கூட இருபது டாலர் மட்டுமே’ என்றும், ‘இந்திய ரயில்வேயின் பொதுப் பிரிவையும் கழிவறைகளையும் பற்றிப் புகார் கூறாமல், செலவழிக்கப் போதுமான பணம் உள்ள ஒருவரை இறுதியாகப் பார்த்தோம்’ என்றும் பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
