சமூக ஊடக மோகத்தின் உச்சமாக, ஒரு நபர் மிக உயரமான பாலத்தின் நடுவில் இருந்த சிறிய இடைவெளியில் நாற்காலியை வைத்து, எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அதன் மீது அமர்ந்தபடி, இயந்திரம் மூலம் கழுத்து மற்றும் கைகளுக்கு மசாஜ் செய்யும் திகிலூட்டும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பாலத்தின் கீழ் விழாமல் அவர் எந்தவிதப் பிடிமானமும் இன்றி சாதாரணமாக அமர்ந்திருந்த காட்சி காண்போரைக் குலை நடுங்கச் செய்தது.
Is this not too dangerous? pic.twitter.com/VVxRdN0xzE
— Dami’ Adenuga (@DAMIADENUGA) December 11, 2025
ஒரு சிறு தவறு நிகழ்ந்திருந்தால் கூட, கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இந்த 51 வினாடி காணொளியை ஒரு கணக்கு சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், “இது மிகவும் ஆபத்தானது இல்லையா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த காணொளிக்கு எதிர்வினையாற்றிய பயனர்கள், “இவ்வளவு உயரத்தில் நிற்க நினைத்தாலே தலை சுற்றுகிறது, இவர் இங்கு ஓய்வெடுக்கிறார்” என்றும், “இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளனர்.
