ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
டெஸ்ட் தொடரில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ‘கிங் கோலியின் பேட்டிங் கைகொடுத்தது. அவர் 120 பந்துகளில் 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என அதிரடி காட்டி 135 ரன்களைக் குவித்து அசத்தினார். இது அவருக்கு ராஞ்சியில் 3-வது சதம்;
<a href=”http://
Virat Kohli teasing Yashasvi Jaiswal’s hairstyle. 🤣❤️pic.twitter.com/UJRdmZH6Y2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 1, 2025
“>
களத்தில் அவர் காட்டிய துடிப்பான ஓட்டமும், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சல்மான் கான் ‘தேரே நாம்’ சிகை அலங்காரத்தை கேலி செய்து சக வீரர்களைச் சிரிக்க வைத்த அவரது ‘டெல்லி பாய்’ குறும்புத்தனமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.
