தமிழக வெற்றி கழகத்தில் இன்று அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இணைந்தனர். இதேபோன்று புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கசானா உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அவர்களுக்கான பதவிகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றி அனைவரின் அனுமதிப்பை பெற்ற சாமிநாதன் மற்றும் ஹசானா ஆகியோருடன் இணைந்து நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு விஜயின் கண்காணிப்பில் இயங்கும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைப்பு செயலாளராகவும் பணியாற்ற உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று அதிமுக முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துகிருஷ்ணன் ஆகியோரையும் வரவேற்பதாகவும் அவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.