உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ் ஹோம்ஸ் பிஜி (PG) விடுதியில், மாணவி ஒருவரை விடுதி நடத்துபவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தில், விடுதியை விட்டு வெளியேறிய மாணவி, தான் முன்பாகச் செலுத்திய காப்புறுதித் தொகையை திரும்பக் கேட்டுள்ளார்.

அப்போது, பிஜி ஆபரேட்டருக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ஆபரேட்டர் மாணவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அவர் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்து காயப்படுத்தியது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பர் வெளியே நின்று இதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நொய்டா காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

“>

 

மாணவியின் புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் பிஜி ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.