சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வயதான பெண்மணி கையால் இழுக்கும் தள்ளுவண்டியில் சில கனமான மூட்டைகளை வைத்து இழுத்துச் செல்கிறார். சாலை சிறிது ஏற்றமாக இருப்பதால், வண்டியை இழுக்க மிகவும் கஷ்டப்பட்டுப் போராடுகிறார். இதைத் தொலைவில் இருந்து பார்த்த நாய், தனது உரிமையாளர் சிரமப்படுவதை உணர்ந்து உடனடியாக உதவிக்காக ஓடிச் செல்கிறது.

அந்த நாய் செய்யும் செயல் அனைவரது மனதையும் தொடுகிறது. உதவ ஓடிச் சென்ற நாய், மூட்டைகளைத் தள்ளுவண்டியில் இருந்து தன் பற்களால் கவ்வி இழுக்கிறது. பின்னர், அந்த மூட்டைகளைத் தானே இழுத்துச் செல்லத் தொடங்குகிறது. இந்தக் காட்சி பார்ப்போரின் மனதைக் கொள்ளைகொள்ளும் விதமாக உள்ளது.

இந்த வீடியோவில், இதேபோன்ற மற்ற நாய்கள் தங்கள் உரிமையாளருக்கு உதவுவது போன்ற சிறிய வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவை மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். பலர் மிகவும் அன்பான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். நாய்களின் இந்த விசுவாசமான செயல்கள், பலரின் இதயங்களைத் தொட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.