நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசன் சஞ்சய், தன்னைச் சுற்றி திரண்டிருந்த ரசிகர்களுடன் அன்பாகவும், பணிவுடன் புகைப்படங்கள் எடுக்கிறார்.
எந்தவித அகம்பாவமும் இன்றி, அமைதியாக அனைவருடனும் நடந்து கொள்கிறார். இந்த காட்சிகள் வெளியாகியதும், விஜய் ரசிகர்கள் “தந்தையைப் போலவே மகனும் எளிமையாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்கிறார்” என பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
Like Father, Like Son 🥰 pic.twitter.com/lVlybuSPFn
— Arun Vijay (@AVinthehousee) October 22, 2025
“>
மேலும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து, “ஜேசன் சஞ்சய்யின் நடத்தை, முகபாவனை, அமைதியான தன்மை — அனைத்திலும் விஜயின் நிழல் தெரிகிறது” எனக் குறிப்பிடுகின்றனர். அவருடைய பொறுமை, பக்குவம், ரசிகர்களுடன் நடக்கும் விதம் ஆகியவை, எதிர்காலத்தில் திரையுலகில் அல்லது அரசியலிலும் தந்தையின் பாதைபோல் மக்களின் மனதில் இடம் பெறக்கூடிய தன்மை கொண்டவர் என்பதற்கான அறிகுறிகள் என கூறி, அந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் பெருமையாக பகிரப்பட்டு வருகிறது.
