மத்தியப் பிரதேசத்தின் ரீவா மாவட்டத்தில் உள்ள அம்ஹியா காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கோவில் பூசாரியும், ஒரு பெண்ணும் நடு ரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியுள்ளது.

https://www.instagram.com/reel/DP0tXlcAMv-/?igsh=MXkxdWRuNnhpbXF1ag==

சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சண்டையைப் பார்த்த மக்கள், ரோட்டில் கூட்டமாய்த் திரண்டு காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின்படி, அந்தப் பெண் அருகே டீ கடை வைக்க முயற்சித்ததிலிருந்து வாதம் தொடங்கியது. வாக்குவாதம் விரைவில் தள்ளுமுள்ளு மற்றும் தாக்குதலாக மாறியது.

கோயில் பூசாரி, அந்தப் பெண்ணை காலால் தாக்கியதும், கைகலப்பில் ஈடுபட்டதும் வீடியோவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ சமூகத்தில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இருபுறமும் காவல்துறையை அணுகி புகார்கள் அளித்துள்ளனர்.

அம்ஹியா போலீசார் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து, சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை நிலைமைகளை உறுதி செய்த பின்னர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.