பசு மாடு, ஆடு எனும் பழக்கமான கால்நடைகளின் பாலை நாம் குடிப்பது வழக்கம். ஆனால், அசாம் மாநிலத்தில் உள்ள 3 வயது சிறுமி ஹர்ஷிதா போரா, யானையின் பாலை குடிக்கும் நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா, வீட்டுப் புறவாயில் கட்டப்பட்டிருக்கும் பெண் யானை தினமும் விளையாடுவார்.

 

அவ்வப்போது அதன் பாலை குடிக்கும் ஹர்ஷிதாவின் காணொளி தற்போது இணையத்தில் வலம் வருகிறது. இந்த வீடியோவில், சிறுமி நேராக யானையின் கீழ் சென்று, அதன் துதிக்கையை பிடித்து, பாலை குடிக்க முயற்சிக்கிறார். அதிசயமாக, யானையும் எந்தவித எதிர்ப்பு இல்லாமல், குழந்தையை எதுவும் செய்யாமல் அமைதியாக அனுமதிக்கிறது.

இந்தக் காட்சி, மனிதர் மற்றும் விலங்கு இடையே உருவாகக்கூடிய அற்புதமான பாசத்தின் சாட்சிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இருப்பினும், இது ஒரு அழகான காட்சி மட்டுமல்ல, சிக்கலான ஒன்று எனும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. “யானை என்பது வனவிலங்கு; எதுவும் நேரலாம்” என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இது அசாமில் மனிதர்-யானை மோதல்கள் அதிகரிக்கும் சூழலில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில், யானை தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்த வகை நட்பு நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமானவையாக இருந்தாலும், பாதுகாப்பு வழிமுறைகளும் முக்கியம் என்பதே நிபுணர்களின் கூற்று.