கோலம்பியா நாட்டைச் சேர்ந்த பெண் பௌலா ஃப்ளோரஸ் தனது காதல் வாழ்க்கையை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியில் பேட்டியளித்த பௌலா, கடந்த 20 ஆண்டுகளாக ஒரு பிசாசுடன் நேரடி உறவில் இருந்ததாக அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார். ஆனால், ஒரு நாள் அந்த ஆவியின் முகத்தை பார்த்ததும், திகைத்து போன அவர், தன் காதலுக்கு புள்ளி வைத்துவிட்டார்.
பௌலா கூறுகையில், ஒரு நாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த ஆவியின் முகம் நேரில் தெரிந்துள்ளது. அதில் பெரிய பற்கள் இருந்ததோடு, ஒரு கர்கோயில் மாதிரியான ராட்சதக் காட்சியில் இருப்பதுபோல் தெரிந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் திகைத்த பௌலா, உடனே அந்த உறவை முடிக்க முடிவெடுத்ததாக தெரிவித்தார். “அந்த முகத்தை பார்த்தவுடன், காதலின் பிசாசு வெளியேறிவிட்டது போல உணர்ந்தேன்!” என அவர் கூறினார்.
இந்த பிசாசு காதலர், தன்னை முதலில் மெதுவாக கையை பிடித்து அறிமுகமானதாகவும், பிறகு ஒவ்வொரு இரவும் தன்னுடன் உறவு வைத்ததாகவும் பௌலா தெரிவித்தார். ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டதாகவும் கூறினார். ஆனால் முகத்தை பார்த்த அதே நாளில், எல்லாவற்றையும் முடிக்க தீர்மானித்த பௌலா, “நல்ல தருணங்கள் இருந்தன, ஆனா அந்த முகம் எல்லாவற்றையும் அழித்தது” என சோகமாக கூறினார்.
