சமூக வலைதளங்களில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என பிரபலமான திவாகர் தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். திவாகர் முதன்முதலில் பிரபலமானது அவரது சில தனித்துவமான வீடியோக்களால் தான். குறிப்பாக, நடிகர் சூர்யாவின் கஜினி திரைப்படத்தில் உள்ள சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை பின்பற்றி தண்ணீர் பழம் சாப்பிடும் காட்சியை நகைச்சுவையாக மீண்டும் உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் அவருக்கு “வாட்டர் மெலன் ஸ்டார்” என்ற பெயர் கிடைத்தது.
அத்துடன், திவாகர் அடிக்கடி நடிகர் விஜய் சேதுபதி போல் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, விஜயை குளித்துக் கொண்டே மிரட்டும் பிரபல காட்சியை அவர் பலமுறை ரீ-கிரியேட் செய்து பார்வையாளர்களை கவர்ந்தார். தற்போது அதே காட்சியை பிக் பாஸ் வீட்டினுள் மீண்டும் செய்து காட்டியுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்து விஜய் சேதுபதியைப் போல நடித்து சிரிப்பை கிளப்பிய திவாகர், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளார். சிலர் இதை அவரது நகைச்சுவை திறமைக்கான சான்று என பாராட்ட, மற்றவர்கள் இதனை “அளவுக்கு மீறிய காட்சியமைப்பு” என விமர்சித்து வருகின்றனர்.
இதை எல்லாம் TikTok ஓட BAN பண்ணி இருக்கணும் 😭#watermelonstar 🍉 😂
நீ நடிப்பு அரக்கன் தான் 🙏போதும் 😂#BiggBossTamil #BiggBossTamil9 #BiggBossTamilSeason9pic.twitter.com/XX4jFtbi7T
— 𝕌𝕥𝕙𝕒𝕪𝕒 (@Uthaya2911) October 6, 2025
