சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஒரு ஹெலிகாப்டர் பறக்க முயலும்போது விபத்துக்குள்ளாகும் காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவில், ஹெலிகாப்டரின் புரப்பெல்லர் சுழலத் தொடங்கி, பறக்கத் தயாராகிறது. ஆனால், திடீரென அது தடுமாறி, பைலட் கட்டுப்படுத்த முயற்சித்தும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்குகிறது. விபத்துக்கு முன் ஒருவர் பைலட்டுக்கு ஏதோ அறிவுரை கூறுவது போலத் தெரிகிறது, ஆனால் சில வினாடிகளில் விபத்து நடந்துவிடுகிறது. இந்த விபத்தில் பைலட் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த 19 வினாடிகள் கொண்ட வீடியோ, @expensive_fails என்ற எக்ஸ் கணக்கில் பதிவேற்றப்பட்டு, 2.68 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, பலரால் விரும்பப்பட்டு, பல்வேறு கருத்துகளைப் பெற்றுள்ளது.
— Expensive Fails (@expensive_fails) September 27, 2025
இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் அதிர்ச்சியையும் பயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர், “இந்த விபத்து வினாடிகளில் நடந்துவிட்டது, நம்புவதற்கு கடினமாக உள்ளது” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “ஹெலிகாப்டர் பறப்பது எவ்வளவு சுவாரஸ்யமோ, அவ்வளவு ஆபத்தானது” என்று பதிவிட்டுள்ளார். சிலர் இதை பைலட்டின் தவறு என்றும், மற்றவர்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ, ஒரு சிறிய தவறு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
