தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. தென்னிந்திய திரை உலகில் 20 வருடங்களுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா தற்போது சூர்யா, சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் 40 வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்யவில்லை. இதற்கிடையில் த்ரிஷா மற்றும் விஜய் குறித்த கிசுகிசுக்கள் அவ்வப்போது வருகிறது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா தனி விமானத்தில் சென்றது முதல் கிசுகிசுக்கள் சற்று அதிகரித்து விட்டது.

அதே நேரத்தில் விஜயின் மனைவி சங்கீதாவும் விஜயுடன் இல்லை எனவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஒரு செய்தி பரவுகிறது. ஆனால் இதனை நெருங்கிய வட்டாரங்கள் மறுக்கின்றது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திரிஷா ஒரு போட்டோவுடன் யார் அவன் என்ற ஒரு பாடல் வரிகளை சேர்த்து வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலில் யார் அவன் ஊர் சொல்லும் ஸ்டார் அவன் என்ற வரிகள் இடம்பெறுகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் தான் அந்த ஸ்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)