இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகள் கழித்து சீனா பயணம் செய்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக உறவில் ஏற்பட்ட தடைகளுக்குப் பிறகு, இது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் போது, “இந்தியா-சீனா இரண்டும் நாகரிகப் பெரும் நாடுகள். நாம் நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் இணைந்து செயல்பட வேண்டும். டிராகனும் யானையும் இணைவது மிக முக்கியம்,” என ஜி ஜின்பிங் கூறினார். மேலும், இந்தியாவுக்கான சீன தூதர் சு ஃபிஹோங், “வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை நாம் உருவாக்கலாம்.

இந்திய நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யலாம். இருநாடுகளும் இணைந்து வெற்றிக்காக செயல்பட வேண்டும்,” என தெரிவித்தார். அமெரிக்காவுடனான உறவில் சிக்கல்கள் உருவாகியுள்ள சூழலில், மோடியின் இந்த சீனா பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.