திருமணம் என்பது மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி. அந்த நேரத்தை சிறப்பாக மாற்ற பலர் தனிப்பட்ட முயற்சிகள் எடுப்பார்கள். அப்படித்தான் ஒரு மணமகனும், தனது திருமண நாளில் “ஃபிலிமி ஸ்டைல்” எண்ட்ரி கொடுக்க நினைத்தார். அதாவது, தனது மனைவியை தூக்கிக்கொண்டு மேடையில் ஏறவேண்டும் என்று திட்டமிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by PaRa DoX⛎ (@chinmoy_sutradhar_)

ஆரம்பத்தில் எல்லாமே நன்றாக இருந்தது. மணமகன், மணமகளை பாசமுடன் தூக்கி, நம்பிக்கையுடன் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தார். ஆனால், ஒரு நிமிஷத்தில் நம்பிக்கை நிலை தடுமாறியது. மணமகளின் புடவை அவருடைய காலில் சிக்கியது. உடனே அவர் சமநிலை இழந்து கீழே விழுந்தார். அதில் அந்த பெண்ணும் சேர்ந்து கீழே விழுந்தார். ரொமான்டிக்கா இருந்த அந்த நொடி, செம்ம நையாண்டியாக மாறியது!

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் chinmoy\_sutradhar\_ என்ற பக்கம் பகிர்ந்தது. தற்போது இது வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் பார்த்து சிரிக்கின்றனர். ஒருவர் கமெண்டில், “இவர் இனிமேல் மனைவியை தூக்க நினைக்கவே மாட்டார்” என்று எழுதியிருக்க, மற்றொருவர் “மணமகனை ஏமாற்றி விட்டது அந்த புடவைதான்!” என கமெண்ட் போட்டிருக்கிறார்.