இன்று ரெயில்களில் பயணிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது கட்டாயம் தான். குறிப்பாக, ஜன்னல் பக்கம் அல்லது கதவோரம் உட்கார்ந்திருப்பவர்களிடம் இருந்து மொபைல் போனை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் எதிர்பார்க்காத மாதிரியான திருட்டு முயற்சி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், ரெயிலில் பயணிக்கும் ஒரு நபர், கதவோரத்தில் உட்கார்ந்து தன் மொபைல் போனில் வீடியோவை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், வெளியே நின்றிருந்த ஒரு வாலிபர் ரெயிலுக்கருகே வந்து, நொடியில் அந்த போனை பிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த பயணி எச்சரிக்கையுடன் இருந்ததால், திருடனால் பறிக்க முடியவில்லை. ஒரு வினாடி தாமதம் ஆகியிருந்தால், அந்த போன் கையிலிருந்து பறிபோயிருக்கும் என்பது மட்டும் உறுதி.
இந்த வீடியோவை riyadrahmanjoy என்ற இன்ஸ்டா பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து, தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “ரெயில் கதவோரத்தில் போன் பயன்படுத்தக் கூடாது” என்று ஒருவரும், “இந்த பையனுக்கு நல்ல லக் தான் இருந்திருக்கு” என்று மற்றொருவரும் கூறியுள்ளனர்.
