மொரோக்கோவில் 2023 செப்டம்பர் 8 அன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஒரு நபர் உயிரைக் காப்பாற்ற வீட்டை விட்டு அவசரமாக வெளியேறினார். ஆனால் , அவர் சட்டை கூட அணியாமல், தனக்கு மிகவும் பிடித்த பிளேஸ்டேஷன் 5 விளையாட்டு கருவியை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடினார். இந்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எந்த சூழலிலும் தனக்கு பிளேஸ்டேஷன் முக்கியம் என்பது போல் இந்த நபர் செய்த செயல் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
