தமிழகம் முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
அதன் பிறகு அன்றைய தினம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்தாலோ சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு அன்றைய தினம் விடுமுறை என்பதால் முறையாக விடுமுறையை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
