நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்தி காடு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு எஸ்.ஐ யாக மோகன்குமார் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் தற்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்த நிலையில் நாமக்கல் மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து தற்போது மோகன்குமாரை கைது செய்துள்ளனர். அந்த 19 வயது மாணவியின் புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
