தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தலைமையிலான த.வெ.க. தனது இரண்டாவது முக்கியமான அரசியல் மாநாட்டை நடத்த தயாராகியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறை எழுத்திய 42 கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
