உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள நகரில் பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சலாஹாபாத் சேலம் போரில் ஆசிரியர் தனஞ்சய் வர்மா வீட்டிற்கு டியூஷன் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி டியூஷனுக்கு சென்ற மாணவியை ஆசிரியர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்த 5 நாட்கள் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மாணவி அவரிடமிருந்து தப்பித்து தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் பாலியல் வழக்கு விசாரணை முடிவில் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ரூபாய் 20000 அபராதம் விதிக்கப்பட்டது.