உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாடி கடையில் மிரட்டல் காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் நகரத்தில் உள்ள கண்ணாடி கடை ஒன்றில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்ணாடி தேர்ந்தெடுத்து அணிந்தபின், பணம் செலுத்த வேண்டிய கட்டத்தில் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடையின் உரிமையாளர் டாக்டர் அஜித் அளித்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டரிடம் பணம் கேட்டபோது, அவர் “நான் பணம் கொடுக்க மாட்டேன், என்ன செய்ய முடியும் அது செய்து பாரு” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
In UP’s Mirzapur, an inspector bargaining over the price of spectacles turned into a heated argument. The cop later walked away without paying. pic.twitter.com/eTG0yMxHA0
— Piyush Rai (@Benarasiyaa) July 25, 2025
வீடியோ வைரலானதை தொடர்ந்து, மிர்சாபூர் போலீசார் இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், காவல்துறையினரிடம் நம்பிக்கை வைத்திருக்க வேண்டிய நேரத்தில், சில அதிகாரிகளின் செயல் கேள்விக்குரியதாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
