நடிகர் சூர்யா நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ரெட்ரோ’ திரைப்படத்துக்குப் பிறகு, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய முயற்சியான ‘கருப்பு’ படத்தில், சூர்யா ஒரு வக்கீலாக மாறியுள்ள தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்தில் மேலும், மலையாள நடிகர் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். நேற்று வெளியான பர்ஸ்ட் லுக்கில் சிவப்பு மற்றும் கருப்பு சட்டையுடன் மாஸ் லுக்கில் தோன்றிய சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
#Karuppu Teaser 🔥
Happy birthday Suriya sir @Suriya_offl ❤️#DaddysHome 😎https://t.co/yYswacrsUz pic.twitter.com/ZxeSRPC8Qs
— RJB (@RJ_Balaji) July 23, 2025
“>
இன்று, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவரது வக்கீல் ரோலில் சக்திவாய்ந்த வசனங்கள் மற்றும் மாஸ் ஸ்கோர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
