தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் 3 நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டியதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, “முதலமைச்சரின் உடல்நிலை தற்போதைக்கு சீராக  உள்ளது. அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நாட்களில் மருத்துவ குழுவின் நெருங்கிய கண்காணிப்பில் முதல்வர் பாதுகாப்பாக வைத்திருக்கப்படுவார்” எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது மருத்துவமனை சார்பில் தகவல் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.