கேரளாவில் அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் இன்று காலை “ஏஐ 2744” என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட நிலையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மும்பையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் இருந்து சற்று விலகி சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இதில் பயணிகள் மற்றும் விமானிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர் என்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விமானம் ஓடு பாதையில் இருந்து விலகியதற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
