எக்ஸ் நிறுவனத்தில் செயல்படக்கூடிய ஒரு AI தொழில்நுட்பம் தான் GROK. இது சமீப காலமாக கெட்ட வார்த்தைகளை பேசுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி குரோத் GROK மிகவும் தவறாக சித்தரித்து பதில் வழங்குவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நெட்டிசன் ஒருவர், பிரதமர் மோடியின் நேர்காணல்களில் முன்பே திட்டமிடப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த GROK AI மோடியின் நேர்காணல்கள் பெரும்பாலும் முன்பே திட்டமிடப்பட்டதாக தான் இருக்கிறது அவரது பதில்கள் மெருகூட்டப்பட்டவையாக உள்ளது. மேலும் அவர் அளிக்கக்கூடிய பதில், உடனடியாக கேள்வியை விட்டு விலகிச் செல்லும் வகையில் உள்ளது.
சமூக ஊடகங்களில் தனக்கான பிம்பத்தை கட்டமைக்கும் விளம்பர யுக்திகளை அவர் பின்பற்றுகிறார் என்று தெரிவித்தது. இதையடுத்து மற்றொருவர் காங்கிரஸ் அரசை விட அதிக ஊழலை செய்யும் மோடி அரசும் மீண்டும் ஆட்சிக்கு எப்படி வந்தது? ஏழைகளின் பணத்தை அதானி அம்பானி போன்ற தனது நண்பர்களுக்கு மோடி எப்படி வழங்கினார் என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த GROK வலுவான ஊடக கட்டுப்பாடு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக பாஜகவின் ஊழல் பெரும்பாலும் மறைக்கப்படுகிறது.
விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அதானி அம்பானிக்கு உதவுகிறார் என்று பதில் அளித்துள்ளது. இது போன்ற சர்ச்சை கூறிய பதில்களை வழங்கி வருவதால் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக, பிடிஐ நிறுவனத்திடம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று பிரதமருக்கு எதிரான கருத்துக்களை மற்ற AI நிறுவனம் வெளியிட்டு இருந்தால் உடனே மத்திய அரசு தடை செய்திருக்கும். ஆனால் GROK மஸ்கின் நிறுவனம் என்பதால் செய்வதறியாது கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
